மனநிறைவு தந்த தரிசனம்!

எழுத்தாளர் லதா சரவணனின் முகநூல் பதிவு:

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பான தரிசனம் கிடைத்தது. நீண்டநாள் கனவென்று கூட சொல்வேன். அருமையான தரிசனம். 20 நிமிடங்கள் எந்த தடையுமின்றி கண்களில் நீர் மறைக்க சிவனின் தரிசனம் கிடைத்தது.

இதேபோல் மதுரையிலும் ஒருமுறை. அம்மனை தரிசித்ததும் சிவனின் சன்னதி உள்ளே நுழையும்போதே விளக்குகள் ஒருமுறை அணைந்து இரு விநாடிகளில் மீண்டும் ஒளிர்ந்தது. எனக்கு என்னை வரவேற்பதைப்போல் தோன்றியது.

எனக்கு முன்பு ஐந்து பேர். உன்னைச் சில நிமிடங்கள் அமைதியாக நின்று தரிசிக்க வேண்டும் என்ற வேண்டுதல். அப்போது பக்கத்தில் ஏதோ ஒரு சப்தம். ஒரு பெண்மணி அர்ச்சகருடன் தீவிர விவாதத்தில்.

என்முறை வரும்போது என் பக்கம் நின்றிருந்த அர்ச்சகர் அந்தப் பிரச்னையை கேட்கப்போய்விட நான் ஆசைதீர சிவனை தரிசித்தேன்.

சில நிமிடத்தில் அவர் கோபச் சுவடே இல்லாமல் புன்னகையுடன் பிரசாதம் தந்தார். அதேபோல் இன்றும். சிறப்பான மனநிறைவான தரிசனம்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like