நோன்பு திறப்பா, துறப்பா?

இஃப்தார் எனில், ரமலான் மாத நோன்பு நோற்கும் இஸ்லாமியர், நோன்பு முடித்து மாலையில் அனைவரும் இணைந்து உண வருந்துவது.

ஆனால், சுவரொட்டி சிலவற்றில் ‘நோன்பு துறப்பு’ என்றும் வேறு சிலவற்றில் ‘நோன்பு திறப்பு’ என்றும் போட்டிருப்பதுதான் குழப்பம்.

ஒரு நாள் உண்ணா நிலையை முடித்து, துறந்து, உண்பது எனில், தமிழில் ‘நோன்பு துறப்பு என்பதே சரி.

பிறகு, ‘திறப்பு’ எப்படி வந்தது? ‘நோன்பு’ என்பதை வழக்கில் ‘நோம்பு’ என்கிறோம் அல்லவா? அப்படித்தான்! ‘நோன்பு.

‘துறப்பு’ என்பது எழுத்துத்தமிழ். ‘நோம்பு திறப்பு’ என்பது பேச்சுத்தமிழ்.

‘நோம்புக் கஞ்சி குடித்தவர்களுக்குத்தான் தெரியும், அதன் தனிச் சுவை! மதம் கடந்த அன்பின் சுவை!

-நன்றி: இந்து தமிழ் திசை

#இஸ்லாம் #Islam #ரமலான் #Ramalan #இஃப்தார் #Iftar #நோன்பு #Fasting #துறப்பு #திறப்பு #நோம்புக் _கஞ்சி #Nombu _kanchi

You might also like