தேர்தலைப் புறக்கணித்த மணிப்பூர் மக்கள்!

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

இந்நிலையில், மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொய்ராங்காம்பு சஜேப் எனும் பகுதியில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல், வாக்குப்பதிவு எந்திரங்களுக்கும் தீ வைத்தது.

மற்றொரு பகுதியில் துப்பாக்கியுடன் வன்முறைக் கும்பல் ஓடுவது போன்ற வீடியோக் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் அரங்கேறின. துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இம்பால் மேற்கில் உள்ள கைடெமில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்துள்ளது.

அந்த தொகுதி, காங்கிரஸ் வேட்பாளர் பிமோல் அகோஜம் வாக்குச் சாவடிக்கு விரைந்து வந்து பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வாக்குச் சாவடி முகவர்களுடன் இதுகுறித்து பேசியதையடுத்து பிரச்சனை தீர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

#மணிப்பூர் #வாக்குச்சாவடி #வாக்குப்பதிவு #மொய்ராங்காம்பு_சஜேப் #மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் #காங்கிரஸ் #பிமோல்_அகோஜம் #manipur_election #Manipu_Election_issue #pimol_akojam

You might also like