கவிதைகளைத் திறக்கும் கடவுச் சொல்!

டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பித்த, தேசிய விருது பெற்ற இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமி எழுதிய ‘மாசி வீதியின் கல் சந்துகள்’ எனும் கவிதை நூலினை முதுபெரும் அரசியல் தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான அய்யா தோழர் நல்லகண்னு வெளியிட சினிமா மாணவரும் உதவி இயக்குனருமான செல்வன் எழில் சாலமன் பெற்றுக் கொண்டார்.

இந்தத் தொகுப்பில் ஐந்து விதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
ஒன்று கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கப்பட்டது.
இரண்டாவது நகரவாழ்வு தரும் நெருக்கடிகளால் உருவானது.
மூன்றாவது இயற்கையின் மீதான தீராத விருப்பத்தால் எழுதப்பட்டது.
நான்காவது கவிதை எழுதுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியது.
ஐந்தாவது தன்னைச் சுற்றிய உலகின் சமகாலப் போக்குகளையும், அபத்தங்களையும் பற்றியது. பெறுவதும் தருவதும் என்று ஒரு கவிதைக்குத் தலைப்பு வைத்திருக்கிறார். இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளையும் திறக்கும் கடவுச் சொல் இதுவே.

*****

நூல்: மாசி வீதியின் கல் சந்துகள்
ஆசிரியர்: சீனு ராமசாமி
விலை: 304
டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள்: 256

You might also like