மம்மூட்டிக்கு மைல் கல்லாக அமைந்த தமிழ்ப் படங்கள்!

மலையாள நடிகர் மம்மூட்டி பிறப்பால் மலையாளியாக இருந்தாலும் தமிழ் உச்சரிப்பில் இவர் அசல் தமிழர் என்றே சொல்லலாம். தமிழை சரளமாக பேச தெரிந்த மல்லு நடிகர்களில் மம்மூட்டியும் ஒருவர். தனது திரைப்பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார் மம்மூட்டி. முகமது குட்டி பனபரம்பில் இஸ்மாயில் என்பது மம்மூட்டியின் நிஜப்பெயர்.

மலையாளத்தில் மட்டுமில்லை தமிழ் ரசிகர்களாலும் இன்றும் கொண்டாடக்கூடிய சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார் மம்மூட்டி. தமிழில் இவர் நடித்த 10-க்கும் மேற்பட்ட படங்கள் ரசிகர்களால் நினைவு கூறப்படுகிறது.

அதுவரை மலையாள நடிகைகளை மட்டுமே கொண்டாடிக் கொண்டிருந்த தமிழ் சினிமா, மம்மூட்டி வருகைக்குப் பின்னர் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

தமிழில் தொடர் வெற்றி படங்களை கொண்டு தனி முத்திரை பதித்தார் மம்மூட்டி. தளபதி படத்தில் மம்மூட்டி நடித்த தேவா கதாபாத்திரம் பல தமிழ் ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட்.

இப்படி மம்மூட்டி தேர்ந்தெடுத்து நடித்த பல தமிழ் படங்கள் ரசிகர்களால் இன்றும் கொண்டாப்படுகிறது. அதில் சிறந்த 5 படங்களை குறித்து பார்ப்போம்.

தளபதி

தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் மம்மூட்டி அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்க உதவிய திரைப்படம் தளபதி. மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில் தேவா ரோலில் நடித்திருப்பார் மம்மூட்டி.

80-ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமில்லை 90-ஸ் கிட்ஸ்களுக்கும் இந்த படம் இன்றும் ஃபேவரெட் தான். தனது நண்பன் சூர்யாவுக்காக (ரஜினி) எதையும் செய்யக்கூடிய ரோலில், நடிப்பில் கலக்கி இருப்பார் மம்மூட்டி.

ஆனந்தம்

இன்று சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் பல சீரியல்களின் ஒன்லைன் ஸ்டோரி இந்த படத்தில் இருந்து தான் கிடைத்தது. கூட்டு குடும்பத்தின் மகத்துவத்தை சொன்ன மிகச் சிறப்பான ஃபேமலி சப்ஜெட்.

இந்தப் படம் வெளிவந்த சமயத்தில் மம்மூட்டி மலையாளத்தில் ஆக்‌ஷன் ரோல்களில் கலக்கி கொண்டிருந்தார். ஆனால் தமிழில் பயங்கர சிம்பிளாக ஆனந்தம் படத்தை நடித்து கொடுத்திருப்பார். மறுமலர்ச்சி படத்திற்கு பிறகு மம்மூட்டி இந்த படத்தில் மீண்டும் தேவயானியுடன் இணைந்து நடித்தார்.

மறுமலர்ச்சி

அன்பு மட்டுமே இந்த உலகை மாற்றும் என்ற ஒன்லைனில் மறுமலர்ச்சி படம் 1998-ம் ஆண்டு வெளியானது.

இந்த படம் முழுக்க வேட்டி, சட்டை அணிந்தப்படியே நடித்திருப்பார் மம்மூட்டி.

படத்தில் தேவயானி-மம்மூட்டி ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ”நன்றி சொல்ல உனக்கு” பாடல் இன்றும் கிராமப்புறங்களில் அதிகம் ரசிக்கப்படும் பாடலாக உள்ளது.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

ஆர்மியில் காலை இழந்த மிலிட்ரி ஆபீஸர் ரோலில் நடித்திருப்பார் மம்மூட்டி. இவருக்கும் ஐஸ்வர்யா ராயுக்குமான சீன்கள் 20-கே கிட்ஸ்களால் இன்றும் ரசிக்கப்படுகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயை விட வயதில் அதிக மூத்தவர் போல் மம்மூட்டி ரோல் இருந்தாலும், இந்த ஜோடியை ரசிகர்கள் ரசித்து பார்த்தனர்.

பேரன்பு

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழியில் மம்மூட்டி நடித்த படம். அழகன் படத்தில் ஆணழகனாக தெரிந்த மம்மூட்டி இந்த படத்தில் பேரன்பு மிக்கவராக நிமிர்ந்து நிற்பார். இந்த படத்தில் அமுதவன் ரோலில் மம்மூட்டியின் நடிப்பு கைத்தட்டல்களை அள்ளியது. பாசமிகு தந்தையாக, பல இடங்களில் நம்மை அழ வைத்திருப்பார்.

– நன்றி முகநூல் பதிவு

You might also like