அரசர் காலத்திலேயே அரசியல் பகடி தொடங்கி விட்டது!

மத்தவிலாச பிரகசனம் நாடகம்

நாடகவியலாளர் பிரளயன் நீண்ட நெடிய நாட்களாக நாடக உலகிற்குப் பங்காற்றி வருபவர். தமுஎகச-வில் குறிப்பிடத் தக்கத் தலைவர்களில் ஒருவர். நான் சென்னைக்கு வந்தபோது அன்றைய தமுஎகச-வில் மாவட்டச் செயலாளர் சிகரம் செந்தில்நாதன்.

மாவட்டம் வட, தென் சென்னையாகப் பிரிகிறபோது தென்சென்னையில் பிரளயன் மாவட்டச் செயலாளர். அப்போதிலிருந்து இருவருடனும் பணியாற்றிய அனுபவம் எனக்கு.

பிரளயனின் நாடகத் தயாரிப்பின் போது உடனிருந்து பார்த்திருக்கிறேன். பாடல் தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறேன். மாற்றி யோசிக்கும் அறிவாளர்களில் பிரளயன் பங்கு மிகப் பெரியது.

வீதி நாடகம் என்பது அவரது நாடக ஆக்கத்தில் ஒரு பகுதி. அடுத்த கட்டமாக மேடையிலும் பிரம்மாண்டமான நாடகத் தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார்.

இவரைத் தஞ்சைப் பல்கலைக் கழகம் வருகைதரு பேராசிரியர் பொறுப்பையும் வழங்கிக் கௌரவித்திருக்கிறது.

தமிழக அரசும் இவருக்கு விருது அளித்துப் பாராட்டியுள்ளது. இவர் பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கும் நாடகப் பயிற்சிகள் வழங்கிப் பல நாடகங்களையும் தயாரித்திருப்பவர்.

இவரது உபகதை நாடக ஆக்கத்தைப்போலவே, மத்தவிலாசப் பிரகசனம் நாடகமும் அதி முக்கியமானது. அரச காலத்திலேயே இப்படியான அரசியல் பகடி நாடகம் எழுதப்பட்டிருப்பது ஆச்சரியம்தான்.

நிகழவிருக்கும் இவரது நாடகத்திற்கு இனிய வாழ்த்துகள். சென்னைக் கலைக்குழு நாடக மேலாளர் அசோக் சிங் மற்றும் நாடகக் கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

மகேந்திரவர்ம பல்லவனின் “மத்த விலாச பிரகசனம்” எப்படி பிரளயன் & கலைஞர்களின் மத்த விலாச பிரகசனமாக மாறுகிறது என்பதை நாமும் பார்ப்போமா?

நன்றி: கவிஞர் நா. வே. அருள் முகநூல் பதிவு

You might also like