நூல் கொள்முதல் விலையில் அதிரடி மாற்றம்:

எழுத்தாளர் அப்பணசாமி

இனிமேல் நூலகக் கொள்முதல் ஆணையில் வாங்கப்படும் நூல்களுக்கும் நூலாசிரியர்கள் ராயல்டி பெற முடியும். நூல் கொள்முதல் விலையிலும் அதிரடி மாற்றம்.

பொது நூலகங்களுக்கு நூல்கள், பருவ இதழ்கள், நாளிதழ்கள் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கான கொள்கையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் பதிப்புத்துறையிலும் நூலகங்களிலும் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

இதிலுள்ள மற்ற முக்கிய அம்சங்கள்: நூலகக் கொள்முதல் ஆணைக்காக இனி ஆண்டுக்கணக்கில் காத்திருக்கவேண்டாம். அவ்வப்போது வெளியிடும் நூல்களை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

காலாண்டுக்கு ஒரு முறை நூல்கள் கொள்முதல் செய்யப்படும். அதிகபட்சம் 1000 படிகள் கொள்முதல் என்ற வரையறை நீக்கப்பட்டு நூலகங்களின் வாசகர்கள் தேர்வு அடிப்படையில் கொள்முதல் செய்வதால் அதிக படிகள் கொள்முதல் செய்யும் வாய்ப்பு.

நூல்கள் கொள்முதல் விலை செய்வதில் பழைய நடைமுறை நீக்கி, காலத்துக்கேற்ப மாற்றி அமைப்பு.

குறிப்பாக, இதன் மூலம் மேலும் நூலகங்களுக்கு நேரடியாக நூல் அனுப்பப்பட்டு 10 நாள்களில் பணம் இணையம் வழி செட்டில் செய்யப்படும். நூல்கள் கொள்முதல் செய்வதில் பெண்கள், சிறார்களுக்கான நூல்களுக்கும் முக்கியத்துவம்.

தங்கள் நூலகத்தில் இருக்கவேண்டிய நூல்களை வாசகர்களே தேர்வு செய்யலாம். தேவையான அலமாரிகளை கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு.

ஒவ்வொரு ஆண்டும் கொள்முதல் செய்யப்படும் நூல்கள், இதழ்களுக்கான தனிக்கணக்கில் இருப்பு வைப்பு.

நீண்ட காலம் எதிர்பார்த்த நூலக சீர்திருத்தங்களில் முக்கிய அம்சங்கள் புதிய கொள்கையில் இடம்பெற்றிருப்பதால் பெரும் நம்பிக்கை அளிக்கின்றன.

அரசுக்கும் பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்கும் இம்மாற்றங்களுக்கு வித்திட்ட உதயசந்திரன் இ.ஆ.ப அவர்களுக்கும் எழுத்தாளனாகவும் வாசகனாகவும் நன்றி.

எழுத்தாளர் அப்பணசாமி

நன்றி: முகநூல் பதிவு

You might also like