வானத்தைத் திறக்கும் சாவி பறவைகளிடம்!

 படித்ததில் ரசித்தது:

நன்றாகப் பார்த்தேன்;
அந்தக் காகத்தின்
அலகில் இருந்தது

ஒரு ஒற்றைச் சாவிதான்;

கவலையாக இருக்கிறது;
வானத்தைப்
பூட்டும் / திறக்கும் அளவுக்கு

பறவைகள் எப்போதிருந்து
கெட்டுப் போயிற்று?

– கல்யாண்ஜி

You might also like