நா.முத்துக்குமாரின் நயமிக்க கவிதை நடை!

நூல் அறிமுகம்:

பலதரப்பட்ட கவிதைகளின் தொகுப்பே கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய ‘பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்’ கவிதை நூல்.

கல்லூரிக் காலத்துக் கவியரங்கத்துக் கவிதைகளின் தொகுப்பு இது. ஹைக்கூ, சென்ரியூ என பலவும் கலந்தது.

அரசியலை, அநாகரிகப் போக்கை, வேதனையின் உச்சமானப் போர்களைப் போகிற போக்கில் எளிய சொற்களால், எதார்த்த நடையில் கேள்விக்கு உள்ளாக்கிவிட்டு நகர்கிறார்.

*****

வானவில்
வானத்தில்
வில்

*

ஞாபக மறதிக்கு
மெமரி மைனஸ் வாங்குங்கள்
கொடுத்த வாக்குறுதியை
உடனே மறக்க உதவுகிறது

*

கால் வைக்கும் இடமெல்லாம்
கண்ணி வெடிகள்.
எந்தப் புற்றில்
எந்த பாம் இருக்குமோ?

*
பரீட்சைக்கு
படிக்கும் மாணவன்
உடைப்பதாய் வேண்டினான்
பாஸானால் தேங்காய்!.
ஃபெயிலானால் பிள்ளையார்!

கொஞ்ச நேரத்தில் படித்துவிடும் நூல் தான். ஆனால் அதன் கருத்துகள் நினைத்து நினைத்து நெடுநேரம் அசைபோட வேண்டியவை.

*****

நூல்: பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்
ஆசிரியர்: நா. முத்துக்குமார்
பக்கங்கள்: 80
விலை: 95

#Pachaiyappanilirundhu_Oru_Tamil_Vanakkam_Book #Na_Muthukumar #பச்சையப்பனிலிருந்து_ஒரு_ தமிழ்_வணக்கம் #டிஸ்கவரி_புக்_பேலஸ் #Discovery_Book_Palace #நா_முத்துக்குமார்

You might also like