தமிழக உள்ளாட்சிப் பிரதிநிதிகளைச் சந்திக்க வந்த பிரான்ஸ் தூதரக அதிகாரி!

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட சட்டமான பஞ்சாயத் ராஜ் எப்படி இந்திய அளவில் செயல்படுகிறது என்பதை, வெவ்வேறு சமயங்களில் பல நாடுகளிலிருந்து பல்வேறு பிரதிநிதிகள் பார்வையிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அண்மையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் தோழர் ச.கணேசன்,
திண்டுக்கல் ஒன்றிய கவுன்சிலர் தோழர் செல்வநாயகம் ஆகிய இருவரையும்  பிரான்ஸ் தூதரக அதிகாரி சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்பு 2 மணி நேரங்களுக்கு மேலாக நீடித்திருந்தது.

உள்ளாட்சி பிரதிநிதிகளான திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் தோழர் ச.கணேசன், திண்டுக்கல் ஒன்றிய கவுன்சிலர் தோழர் செல்வநாயகம் ஆகிய இருவரும் மேற்கொண்ட மக்கள் பணிகள்.

* சுகாதரம்
* குடிநீர்
* ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்த நடைபெறும் போராட்டம்.
* டாஸ்மார்க் இல்லாத வார்டு என்னுடைய வார்டு
* வார்டு சபை கூட்டம்,அதன் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது.
* புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உரிமைகளை கேரளா போன்று தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும்.
* மதுரை மாமன்ற உறுப்பினர் தோழர் லீலாவதி மக்களுக்கு குடிநீர் கேட்ட காரணத்தால் அரசியல் படுகொலை தவிர்க்கப்பட வேண்டும்.
* இப்போது தமிழக திட்டக் கமிஷனலில் பஞ்சாயத்துராஜ் சட்டம் உருவாக காரணமாக இருந்த முனைவர் க.பழனித்துரை போன்றவர்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினரான கணேசன், ஏற்கனவே நீண்ட காலமாக கட்சி உறுப்பினராக பல்வேறு பொதுப்பணியில் ஈடுபட்டிருப்பவர்.

அவர், தான் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தன்னுடைய செயல்பாடு குறித்த விழிப்புணர்வுடன் இருப்பவர்.

தன்னுடைய வார்டை டாஸ்மாக் இல்லாத வார்டாக வைத்திருக்கும் பெருமைக்குரியவர். அவரை சந்தித்து உரையாடியபோது அவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் தங்களுக்கு இருக்கும் உரிமைகள் குறித்தும், மக்களுக்கு எந்த அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்துகொண்டு செயல்பட முடியும் என்பதையும் விளக்கியிருக்கிறார்கள்.

ஏற்கனவே மதுரையில் குடிநீர் பிரச்சனையில் உரிமைக் குரல் எழுப்பிய லீலாவதி உயிரிழந்த அனுபவத்தையும் விவரித்திருக்கிறார்.

பல்வேறு ஜனநாயக அமைப்புக்கு முன்னுதாரணமாக இருக்கக்கூடிய பிரான்சிலிருந்து, பிரெஞ்ச் தூதரக அதிகாரி நேரடியாக வந்து இங்கிருக்கும் கள அனுபவங்களை நேரடியாக உணர்ந்து கொண்டு சென்றிருப்பது தனிச் சிறப்பு.

You might also like