சாதிக்கக் கற்றுத் தரும் ‘வானம் நம் கையில்’ நூல்!

நூல் அறிமுகம்:

பறத்தல் என்பது விடுதலையின் அடையாளம். எந்தக் கட்டுகளும் இல்லாதவர்கள்தான் பறக்கமுடியும். அப்படிப் பறக்கவேண்டும் என்பது மனிதனின் நெடுநாள் ஆசை, கனவு. ஆனால், மனிதன் பறக்கப் படைக்கப்பட்டவன் இல்லை.

அறிவின் துணையோடு அவன் ஒரு கருவியை உருவாக்கிதான் பறக்கக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த வியப்பூட்டும் முன்னேற்றத்தைச் சாதித்ததும், உலகமே மாறிவிட்டது, வாழ்க்கைமுறையும் மாறிவிட்டது.

ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வரலாற்றிலும் பறத்தல் என்பது ஒரு மிகப் பெரிய திருப்புமுனை. மனிதன் பறக்கக் கற்றுக்கொண்ட கதையைச் சிறுவர்களுக்குச் சுருக்கமாகவும் அழகாகவும் சொல்கிறது இந்த நூல். அத்துடன், முயற்சியும் முனைப்பும் கனவும் சேர்ந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற பாடத்தையும் கற்றுத்தருகிறது.

*****

நூல்: வானம் நம் கையில்
ஆசிரியர்: என். சொக்கன்
ஜீரோ டிகிரி பப்ளிசிங்
பக்கங்கள்: 50
விலை: ₹60.00/-

#என்_சொக்கன் #வானம்_நம்_கையில்_நூல் #Vaanam_Nam_Kayil_book_review #வானம்_நம்_கையில் #n_sokkan

You might also like