எழுத்தாளர்களின் ஆகச்சிறந்த 100 சிறுகதைகளின் தொகுப்பு நூல்!

நூல் அறிமுகம்:

தமிழ்ச் சிறுகதைக்கு வயது நூறு. இந்த நூற்றாண்டுக்காலத்தில் பல நூறு கதைகள் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்டுத் தத்தம் காலகட்டங்களின் தேவையை நிறைவு செய்திருக்கின்றன.

அந்தப் பல நூறு கதைகளிலிருந்து ஆகச் சிறந்த ஒரு நூறு கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இவை எந்தச் சங்கப்பலகையின் தரவரிசைப்படுத்தலின் கீழும் தொகுக்கப்படவில்லை. ஆயினும் எழுதப்பட்ட காலத்தில் சமகாலத் தமிழ்ச் சிறுகதையின் தரத்தை உயர்த்திய கதைகள் என்னும் பெருமைக்குரியவை.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகளின் போக்கையும் சமூக இயங்குவெளி குறித்த புரிதலையும் பன்முகப் பரிமாணத்தையும் இக்கதைகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

புதுமைபித்தன், கல்கி, சி.சு.செல்லப்பா, மௌனி, லா.ச.ரா, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, அம்பை, சா.கந்தசாமி, பூமணி, அசோகமித்திரன், வண்ணதாசன், தஞ்சை ப்ரகாஷ், நாஞ்சில் நாடன், கந்தர்வன், பிரமிள், பிரபஞ்சன், சோ.தர்மன், வேல ராமமூர்த்தி, சி.மோகன், யூமா.வாசுகி, கோணங்கி, தேவிபாரதி, பெருமாள்முருகன் உட்பட தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களின் ஆகச்சிறந்த 100 சிறுகதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

எழுத்தாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆகச்சிறந்த தொகுப்பு இது. வாசகர்கள் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம்.

******

நூல்: இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு
பதிப்பு: வீ.அரசு
அடையாளம் பதிப்பகம்
பக்கங்கள்: 1216
விலை: ₹.441.00

#இருபதாம்_நூற்றாண்டுச்_சிறுகதைகள்_நூறு #irupathaam_nootraandu_sirukathaigal_nooru
#வீ_அரசு. #Adaiyalam_Publications #அடையாளம்_பதிப்பகம் #Short_Story #சிறுகதை #Miscellaneous #V_Arasu

You might also like