தமிழ் சினிமாவில் மனிதனின் உணர்ச்சிகளை பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல், பின்னாளில் அவருக்கே பலித்தது என்ற தகவல் பலரும் அறியாத ஒன்று.
மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் சந்தோஷங்கள் என அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல்கள் மூலம் ஆறுதல் சொன்ன கவிஞர் தான் கண்ணதாசன்.
எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினிகாந்த் வரை பல நடிகர்களுக்கு தனது பாடல்கள் மூலம் பெரிய வெற்றியை கொடுத்த கண்ணதாசன், சிவாஜி நடித்த ஒரு படத்திற்காக எழுதிய பாடல் பின்னாலி அவருக்கே பலித்தது என்று சொல்லலாம்.
1966-ம் ஆண்டு ஆர்.ஆர் சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் மகாகவி காளிதாஸ். சிவாஜி, சவுக்கார் ஜானகி, முத்துராமன், ஆர்.எஸ்.மனோகர், நாகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்திற்கு, கே.வி.மகாதேவன் இசையமைக்க அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். அத்தனை பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
ஒரு அறிவாளியை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற இளவரசி சிலரை அவமானப்படுத்த, அவர்கள் அனைவரும் இணைந்து வெள்ளந்தியாக இருக்கும் சிவாஜியை அறிவாளி என்று கூறி இளவரசி சவுகார் ஜானகிக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள்.
முதலிரவு அன்று இவர், வெள்ளந்தி என்று தெரியவர உடனடியாக அவரை அழைத்து சென்று, காளியிடம் விட்டு, இவரை எனக்கு சமமாக மாற்றிக்கொடு என்று சொல்லிவிட்டு மயக்கமடைந்துவிடுவார்.
அப்போது நம்மால் இவருக்கு இப்படி ஆகிவிட்டே என்று நினைத்த வெள்ளந்தியான சிவாஜி, எனக்கு அறிவை கொடு என்று காளியிடம் வேண்டுகிறார்.
அப்போது அவர் முன் தோன்றும் காளி, நீ நாடெங்கிலும் பாடல் பாடி அமரகவியாக வலம் வருவாய் என்று வரம் கொடுப்பார்.
அந்தச் சமயத்தில் வரும் பாடல் தான் ‘யார் தருவார் இந்த அரியாசனம்’ என்ற பாடல். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
(அதே சமயம் கடந்த 2006-ம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான வட்டாரம் படத்தில் கூட இந்த பாடல் இடம் பெற்றிருக்கும்.)
கவியரசர் கண்ணதாசன் எழுதிய இந்த பாடலை டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார்.
இந்தப் பாடலை எழுதிய கண்ணதாசன், பின்னாளில், எம்.ஜி.ஆர் முதல்வர் இருக்கையில் அமர்ந்தபோது, அவர் பதவிக்கு இணையான அரசவைக் கவிஞர் பதவியை கண்ணதாசனுக்கு வழங்கி அழகு பார்த்தார்.
அந்த வகையில் கண்ணதாசன் எழுதிய பாடல் அவருக்கே பலித்துள்ளது.
- நன்றி : முகநூல் பதிவு
#kannadhasan #mgr #t_m_soundarajan #mahakavi_kalidas #sivaji #sowkar_janaki #கண்ணதாசன் #எம்ஜிஆர் #டி_எம்_சௌந்திரராஜன் #மகாகவி_காளிதாஸ் #சிவாஜி #சவுக்கார்_ஜானகி #முத்துராமன் #ஆர்_எஸ்_மனோகர் #நாகேஷ் #கே_வி_மகாதேவன் #yaar_tharuvar_intha_ariyasanam_song #யார்_தருவார்_இந்த_அரியாசனம்_பாடல் #கவியரசர்_கண்ணதாசன்