சென்னை மாநகராட்சிக்குப் பணிவான ஒரு விண்ணப்பம்!

விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி மற்றும் புறநகரப் பகுதிகளில் வாழும் மக்கள் தொகையை மட்டும் எடுத்துக் கொண்டால், அந்த ஜன அடர்த்தி 1.25 கோடியை தாண்டலாம்.

அந்த அளவுக்கு குறுகிய நிலப்பரப்புக்குள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சென்னைவாசிகள்.

ஒருபுறம் மெட்ரோ ரயில்வே வேலைக்கானப் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அதனால் சென்னை நகரப் போக்குவரத்து நெரிசல்மிக்கதாக மாறிபோய் இருக்கிறது.

இன்னொரு புறம் 2.25 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த மழைநீர் வடிகால் வேலைப் பணிகள் இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான குளத்தூரில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அதிலும் வட இந்தியத் தொழிலாளர் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் இந்த வேலைகள் முழுக்க தற்காலிகமாக தள்ளிவைக்கப்படலாம். தேர்தல் முடிந்த பிறகு பணி தொடரும் வரை சென்னை வாசிகள் வழக்கம்போலவே அவதிபட நேரிடலாம்.

அதனால் சென்னை மாநகராட்சி தற்போது நடந்து கொண்டிருக்கின்ற மழைநீர் வடிகால் திட்டப் பணிகளையாவது விரைந்து முடிப்பது மாநகராட்சி ஊழியர்களுக்கும் நல்லது. குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும் நல்லது.

சென்னை மாநகராட்சி இந்த வேண்டுகோளைப் பரிசீலிக்கட்டும்.

#சென்னை_நகரப்_போக்குவரத்து #தமிழ்நாடு_முதல்வர் #ஸ்டாலின் #குளத்தூர் #வட_இந்தியத்_தொழிலாளர் #சென்னை_மாநகராட்சி #Chennai_Municipal_Corporation #மழைநீர்_வடிகால்_திட்டப்பணி #Rainwater_Project_Work #Drainage_Project_Work #மெட்ரோ_ரயில் #Metro_rail #மக்கள் #People #chennai_corporation #cm_stalin #kulathur #north_india_workers

You might also like