தமிழ் திரைப்படங்களில் காதலைப் போலவே நட்பும் முக்கிய அம்சமாகும். என்னதான் வித்தியாசமான படங்களை பார்த்து நாம் மகிழ்ந்து வந்தாலும், நட்பு ரீதியான படங்கள் பார்க்கும்போது நம் மனதிற்கு இனம் புரியாத ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கும்.
கதையின் நாயகனுக்கும் நாயகிக்கும் நண்பர்கள் மற்றும் தோழிகள் இருப்பார்கள். நட்புக்காக உயிரைக் கூட விடக் கூடிய அளவிற்கு அவர்கள் நட்பு காட்டப்பட்டிருக்கும்.
இதேபோல், சில தமிழ் படங்களில் ஆண் – பெண் நட்பும் அழகாக காட்சிப் படுத்தப்படும்.
அப்படங்களில் இடம்பெற்றிருக்கும் ஆண்-பெண்ணுக்குமான நட்பை பார்க்கும் பொழுது இதுபோன்ற ஒரு நட்பு நம்ம வாழ்க்கையிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பொறாமைப்படும் அளவிற்கு சில படங்கள் அமைந்திருக்கிறது.
அதேபோல் ஆணும், பெண்ணும் பழகிக் கொண்டாலே அது காதலாகத் தான் மாறும் என்ற கருத்தை உடைத்துக் காட்டிய படங்களும் உண்டு.
அந்த படங்கள் குறித்து ஒரு பார்வை:
ஆட்டோகிராப்:
சேரன் இயக்கத்தில் 2004-ம் ஆண்டு ஆட்டோகிராப் திரைப்படம் வெளிவந்தது. இதில் சேரன், கோபிகா, சினேகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் கதை ஆனது காதல் தோல்வியால் வாழ்க்கையை இருட்டில் ஓட்டிக் கொண்டிருக்கும் சேரனுக்கு தோள் கொடுக்கும் தோழியாக சினேகா அவருடைய நட்பின் ஆழத்தை காட்டி இருப்பார்.
அதே நேரத்தில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள நம்மிடம் உண்மையான நண்பர்கள் இருந்தால் போதும் என்று உணர்த்தும் படமாக வெளிவந்திருக்கும்.
‘கிழக்கே பார்த்தேன் விடியலாய் தெரிந்தாய் அன்புத் தோழி’ என தங்களது நட்பின் ஆழத்தைப் பாடல் வரிகளிலேயே அழகாகக் காட்டி இருப்பார் சேரன். இந்தப் படத்தில் சேரன், சினேகா நட்பு சிறப்பாக காட்டப்பட்டிருக்கும்.
பிரியாத வரம் வேண்டும்:
இதுவும் நட்பை வித்தியாசமாகச் சொன்ன படங்களில் ஒன்று. சிறுவயது முதல் பழகி வரும் இருவர், வெவ்வேறு நபர்களைக் காதலிப்பர். பின்னர் தங்களது நட்பில் இருந்த காதலை அவர்கள் அடையாளம் காண்பர்.
5 ஸ்டார்:
இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு 5 ஸ்டார் திரைப்படம் வெளிவந்தது. இதில் கனிகா, பிரசன்னா, கிருஷ்ணா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் முழுக்க முழுக்க கல்லூரி நண்பர்களின் நட்பை வைத்து எடுக்கப்பட்டிருக்கும்.
அதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நட்புக்குள் எந்த ஒரு வித்தியாசமும் கிடையாது என்று சொல்லும் அளவிற்கு பெண்களுக்கு திருமணம் ஆன பிறகும் நட்புடன் இருப்பதை அழகாக காட்டப்பட்டிருக்கும்.
பிரியமான தோழி:
இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு பிரியமான தோழி திரைப்படம் வெளிவந்தது. இதில் மாதவன், ஜோதிகா, ஸ்ரீதேவி, வினீத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் மாதவன் மற்றும் ஸ்ரீதேவி சிறு வயதிலிருந்தே நண்பர்களாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அவர்களுடைய நட்பின் ஆழத்தை அழகாக காட்டி இருப்பார்கள்.
பெங்களூர் டேஸ்:
இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு பெங்களூர் டேஸ் திரைப்படம் வெளிவந்தது. இதில் நிவின் பாலி, துல்கர் சல்மான், பகத் பாசில், நஸ்ரியா, பார்வதி திருவோடு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் கேரளாவில் இருந்து பெங்களூருக்கு செல்லும் மூன்று நண்பர்களை சுற்றி எடுக்கப்பட்டிருக்கும்.
அத்துடன் இவர்களுடைய நட்பை பார்ப்பதற்கு ரொம்பவே ஹேப்பியாக கடைசி வரை நண்பர்கள் நம்முடன் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதை சொல்லும் விதமாக எடுக்கப்பட்டிருக்கும்.
புன்னகை தேசம்:
கே. ஷாஜகான் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு புன்னகை தேசம் திரைப்படம் வெளிவந்தது.
இதில் தருண், சினேகா, குணால், தாமு மற்றும் ப்ரீத்தி விஜயகுமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் கதையானது நல்ல நண்பர்கள் இருந்தால் வாழ்க்கையில் ஜெயித்து காட்டலாம் என்று சொல்லும் விதமாக இருக்கும்.
அத்துடன் நண்பர்கள் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை காட்டிய படமாகும்.
காதல் தேசம்:
இதேபோல், காதல் தேசம் படத்தில் நாயகிக்கு இரண்டு ஆண் நண்பர்கள். இருவருமே நாயகியை விழுந்து, விழுந்து காதலிப்பார்கள்.
ஆனால், நாயகியோ நண்பர்களில் ஒருவரை காதலராக்கி, மற்றொருவரைக் காயப்படுத்த விரும்பாமல் வாழ்நாள் முழுவதும் நாம் நண்பர்களாகவே இருப்போம் என வித்தியாசமான முடிவை எடுப்பார்.
காதலும் கடந்து போகும்:
நலன் குமாரசாமி இயக்கத்தில் 2016-ம் ஆண்டு காதலும் கடந்து போகும் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் மடோனா வேலை இல்லாமல், நண்பர்களும் இல்லாமல் தனியாக தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு நண்பராக இருந்து அவருடைய வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு வழிகாட்டியாக அனைத்தையும் செய்து முடித்து கூடவே பக்கபலமாக இருப்பார்.
புது வசந்தம்:
விக்ரமன் இயக்கிய இப்படத்தில் காதலனைத் தேடி வரும் நாயகிக்கு நண்பர்கள் சிலர் அடைக்கலம் கொடுப்பார்கள்.
ஒரு இரவு மற்றொரு ஆணுடன் தங்கினாலே தவறாகப் பார்க்கப் படும் சமுதாயத்தில் பல ஆண்களுடன் சேர்ந்து தங்குயிருக்கும் நாயகியை அனைவரும் ஏளனமாகப் பேசுவார்கள்.
பாண்டவர்பூமி:
பாண்டவர் பூமி சேரன் இயக்கத்தில் 2001-ம் ஆண்டு வெளிவந்தது. இயக்குனர் அருண் விஜய், ராஜ்கிரண், விஜய குமார் நடித்துள்ள குடும்பத் திரைப்படம்.
இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுஜாதா ரங்கராஜன் தயாரிக்க, பரத் வாஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் அருண்குமார் நாயகியைக் காதலித்தாலும், தன் தாய்மாமனைத் திருமணம் செய்து கொள்ள காத்திருக்கும் நாயகி அவருடன் நட்புடனே இருப்பார்.
‘ஆணும் பெண்ணும் காதலில்லாமல் பழகிக்கலாம், அது காலம் முழுதும் களங்கப்படாமல் காத்துக்கலாம்’ என்ற வரிகள் இடம்பெற்ற தோழா, தோழா பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
– நன்றி : முகநூல் பதிவு
#5ஸ்டார் #பிரியமான_தோழி #புன்னகை_தேசம் #பெங்களூர்_டேஸ் #காதல்_தேசம் #காதலும்_கடந்து_போகும் #புது_வசந்தம் #ஆட்டோகிராப் #நட்பு #பாண்டவர்_பூமி #5star #priyamana_thozhi #punnagai_desam #kadhal_desam #puthu_vasantham #auto_graph #pandavar_boomi #priyathavaram_vendum #பிரியாத_வரம்_வேண்டும் #kaathalum_kadanthu_pogum