ஆய்வாளர் ரெங்கையா முருகன் தன் பேஸ்புக் பக்கத்தில் கவலையுடன் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
அதில், “நேதாஜி பிறந்தநாளில் நான் மிகவும் மதிக்கும் நேதாஜி ஆய்வாளர் மா.சு. அண்ணாமலை, ‘நேதாஜி படையில் வீரத்தமிழ்ப் பெண்கள்’ புத்தக மதிப்புரையை நண்பர் ஆ. அறிவழகன் எழுதியுள்ளார்.
இந்தக் கண்காட்சியில் இந்த புத்தகம் ஒருவர் கூட வாங்கவில்லை என்று நூலாசிரியர் பேரா. மா.சு. அண்ணாமலை அவர்கள் சிரித்துக்கொண்டே சொன்னார்.
எனக்கு மனம் வலித்தது. ஆனால், அவர் இந்த ஆய்வுக்காக தனது பணத்தை செலவழித்துக் கொண்டு உலகெங்கும் சென்று ஆய்வு செய்து எழுதிய இந்த நூல் ஒருவர்கூட கண்காட்சியில் வாங்கவில்லை என நினைக்கும்போது தியாகத்திற்கு என்ன மதிப்பு இருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது” என்று வருத்தப்பட்டுள்ளார்.