மதுரை ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் 12,176 காளைகள்!

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை.

அந்த வகையில், இந்தாண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளின் ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய கிராமங்களில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் எண்ணிக்கையை வெளியிட்டார்.

அதன்படி, மொத்தமாக 12176 காளைகளும், 4514 வீரர்களும் பங்கேற்பதாக கூறினார். அதில், அலங்காநல்லூரில் 6099 காளைகளும், பாலமேட்டில் 3677 காளைகளும், அவனியாபுரத்தில் 2400 காளைகளும் பங்கேற்பதாக கூறினார்.

அதோடு, அலங்காநல்லூரில் 1784 வீரர்கள் பங்கேற்கவுள்ளதாகவும், பாலமேட்டில் 1412 வீரர்கள் பங்கேற்கவுள்ளதாகவும், அதேபோல் அவனியாபுரத்தில் 1318 வீரர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

You might also like