உடலுக்கு நன்மைகள் கொடுக்கும் மஞ்சள் பூசணி!

காரசாரமான உணவுப் பிரியர்களுக்கு இனிப்பு சுவையுடைய மஞ்சள் பூசணி கொஞ்சம் கசக்கத்தான் செய்யும். ஆனால் சுவைக்கு அப்பால் சத்தான பல ஆரோக்கிய நன்மைகளுடன் விளங்குகிறது மஞ்சள் பூசணி.

இதில் இருக்கும் ஊட்டச்சத்து உடல் ஆரோக்கியத்தையும் அழகையும் கூட்டுகிறது.

நாம் தினமும் பூசணி எடுத்துக் கொள்வதால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

1. பூசணியில் உள்ள சத்துக்கள்

இதில் இருக்கும் கலோரிகள்,கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், நார், வைட்டமின் ஏ, பி, பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.

மேலும் மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், ஃபோலேட் போன்ற சத்துகள் சிறிய அளவில் காணப்படுகின்றன.

பூசணியில் வைட்டமின் ஏ ஆக மாறும் பீட்டா கரோட்டின் அதிகம் காணப்படுகிறது. மஞ்சள் பூசணியில் வைட்டமின் சி மற்றும் இதர கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

எனவே தினமும் ஒரு கப் எடுத்துக் கொண்டால் உடல் அழகை கூட்டுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஒரு டம்ளர் மஞ்சள் பூசணி ஜூஸாக எடுத்து கொண்டால் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இந்த பூசணி சாறு தினமும் பருகுவதால் பாக்டீரியா, வைரஸ் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.

2. பூசணியில் நிறைந்திருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள்

மஞ்சள் பூசணியானது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுகிறது. நம் உடலில் அதிகப்படியான ஃப்ரீ ரேடிக்கல்கள் இருந்தால் இவை மன அழுத்த நோயை ஏற்படுத்தும்.

இதைத் தவிர்க்க வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் பூசணியை எடுத்துக் கொள்ளும் போது இவை ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி, நம் செல்களை சேதப்படுத்தாமல் தடுக்கும் ஆற்றலை கொண்டது.

ஆக்ஸிஜனேற்ற பண்பால் புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

பொதுவாக பூசணியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிகம்.

இதில் பீட்டா கரோட்டின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் ஏ, நம் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராட உதவும் என்று

4. விட்டமின் சி நன்மைகள்

இது உடலில் இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்து நோய் எதிர்ப்பு செல்களுக்கு புத்துயிர் கொடுத்து சுறுசுறுப்புடன் செயல்பட உதவுகிறது.

மேலும் இதில் இருக்கும் வைட்டமின் E, இரும்பு மற்றும் ஃபோலேட் அனைத்தும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் உதவுகின்றன.

வைட்டமின் ஏ உங்கள் பார்வை இழப்பு அபாயத்தை குறைக்கிறது. இதிலுள்ள பீட்டா கரோட்டின் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ வழங்குகிறது..

5. குறைந்த கலோரி

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் இரண்டு வேளை ஒரு கிளாஸ் மஞ்சள் பூசணி ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.

இதில் கலோரி குறைவு என்பதால், இது உடல் ஒரு எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு ஒரு சிறந்த உணவாகும்.

மேலும் பூசணியில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

பூசணியில் இருக்கும் பீட்டா கரோட்டின் போன்ற கரோட்டினாய்டுகள் உங்கள் தோல் உட்பட பல்வேறு உறுப்புகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

மேலும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் சேதத்திலிருந்து உங்கள் சரும செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன.

மேலும் பூசணியில் வைட்டமின் C அதிகம் நிறைந்திருப்பதால் ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியமான ஒரு சிறந்த உணவு என்றால் அது மஞ்சள் பூசணியாகத்தான் இருக்கும்.

இங்கு நாம் மிக எளிதில் கிடைக்கக் கூடிய பூசணியின் மகத்துவங்களை தெரிந்து கொண்டோம். எனவே பூசணியை உண்டு பூரண உடல்நலம் பெற்றிடுவோம்.

– யாழினி சோமு

You might also like