சென்னையில் இன்னுமொரு விளையாட்டு பொழுதுபோக்கு நிறுவனம்!

தமிழகத்தின் தலைசிறந்த விளையாட்டு பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான நாசா யூத் ஹப் சென்னையில் தமது புதிய கிளையை பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள மெரினா வணிக வளாகத்தின் [Marina Mall] இரண்டாவது தளத்தில் திறந்துள்ளனர்.

இவர்கள் ஏற்கனவே பெசன்ட் நகரிலும், கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியிலும் தங்களது கிளையை நிறுவியுள்ளனர். தற்போது நான்காவது கிளையை அடுத்ததாக கோயம்புத்தூரிலும் திறக்க உள்ளனர்.

விழாவில் சென்னை-28 நட்சத்திரங்களான மிர்ச்சி சிவா, பிரேம்ஜி அமரன், அஜய் ராஜ், சிவா, சுஜா வருணி மற்றும் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இங்கு பௌலிங், ஸ்னூக்கர், லேசர் டேக், பிஎஸ்5, விஆர், ஆர்கேட் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.

குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட சிறந்த இடமாக அமைந்துள்ளது.

You might also like