வகுப்பறையில் ஒரு குட்டித் திருவிழா!

பாடம் நடத்துவதில் புதுமை

ஒரு பள்ளியில் மாணவர்கள் வீட்டிலிருந்து பல வகையான உணவுகளைக் கொண்டுவந்து சாப்பிட்டு, உணவு என்ற பாடத்தைப் புரிந்துகொண்ட விதத்தை செங்கமலா என்பவர் முகநூலில் பதிவு செய்திருக்கிறார்.

அறிவியலில் ‘உணவு’ என்று ஒரு பாடம். ஆரோக்கியமான வாழ்வுக்கு எவ்வித உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தாலும் அதை மாணவர்கள் வீட்டில் உண்பதில்லை.

அதனால், பாடத்தில் படித்த சத்தான உணவுகளை சமைத்து எடுத்து வந்து வகுப்பறையில் குட்டித் திருவிழா போன்று வைத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பகிர்ந்து கொடுத்து, எதில் எந்தச் சத்து உள்ளது என மாணவர்களே விளக்கம் அளித்தனர்.

மண்பாண்டத்தில் பானக்காரம், எலுமிச்சை இனிப்புச் சாறு, முளைக்கட்டிய பயறு வகைகள், ஆவியில் வேகவைத்த உணவுகள், நறுக்கிய காய்கறிக் கலவை,

பழக்கலவைகள், பிட்டு, தினைமாவு உருண்டை, பருப்புப் பாயசம், இன்னும் பலவகையான சத்து நிறைந்த உணவு வகைகளைக் கொண்டு வந்து அதைப் பற்றியும் அதில் உள்ள சத்துகள் பற்றியும் விளக்கம் அளித்தனர்.

You might also like