கலீல் ஜிப்ரான் தன்னுடைய வார்த்தைகளைக் கையாளும் திறமையைக் கொண்டு பல வாசகர் இதயங்களை ஆட்சி செய்தவர்.
தீர்க்கதரிசி என்னும் இந்நூல் அல்முஸ்தபா கூறிய 26 பாடங்களாக முன்வைக்கப்படுகிறது. இது ஒரு ஆன்மீக தத்துவ நூல் என்றே கூறலாம்.
“The Prophet” என்ற ஆங்கில நூலின் மொழியாக்கமே தீர்க்கதரிசி என்ற நூலாக வெளிவந்ததுள்ளது. உலகில் உள்ள 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்.
நூலிலிருந்து சில சிறந்த வரிகள்:
~அன்பு
அன்பு ஆட்கொள்வதில்லை..
தன்னை ஆட்கொள்ள விடுவதும் இல்லை.. அன்பே அன்புக்குப் போதுமானது…
~ யாருக்குத் தான் வெறும் நாணலாக, அமைதியாக, உணர்ச்சிகளற்று வாழ விருப்பம்?
~ அனைத்து அறிவும் வீண், வேலை இல்லாவிட்டால்..!
அனைத்து வேலையும் வெறுமை , அன்பு இல்லாவிட்டால்..!
~ சிறிய விஷயங்களின் பனித்துளியில் தான் இதயம் தன் காலைகளைக் கண்டுபிடித்து புத்துணர்வு பெறுகிறது.
~ நேற்று என்பது இன்றைய நினைவு
நாளை என்பது இன்றைய கனவு
நூல்: தீர்க்கதரிசி
ஆசிரியர்: கலீல் ஜிப்ரான்
எழுத்தாளர் தமிழில்: கவிஞர் புவியரசு
பக்கங்கள் : 135
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம்
விலை : ₹40