புதிய தோற்றத்தில் நடிகர் விஷ்ணு விஷால்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர்களில் முக்கியமானவர் விஷ்ணு விஷால்.

கிராமத்து இளைஞராக அறிமுகமாகி அதன் பிறகு நல்ல கதைகள் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து பல வித்தியாசமான ரோல்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் விஷ்ணு விஷால்.

இந்த கதாப்பாத்தில் தான் நடிப்பேன் என்று ஒரே வட்டத்திற்குள் அடைபடாமல் கதைக்கு ஏற்ப தனது உடல் மற்றும் நடிப்புத் திறனை மாற்றி கொண்டு நடித்து வருவது தான் இவரது ஸ்பெஷல்.

சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழுவில் அறிமுகமாகிய இவர், கபடி வீரர் கதாபாத்திரத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இடம் பொருள் ஏவல், இன்று நேற்று நாளை என சூப்பர்ஹிட் படங்களில் நடித்து தனெக்கென ரசிகர்கள் வட்டத்தைப் பெற்றார்.

அடுத்து நடித்த மாவீரன் கிட்டு, கதாநாயகன் உள்ளிட்ட படங்கள் சரியாக போகாத நிலையில் மிரட்டலான நடிப்பால் ராட்சசன் மூலம் கம்பேக் கொடுத்தார் விஷ்ணு விஷால்.

சிலுக்குவார்பட்டி சிங்கம், காடன் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு இவர் நடிப்பில் வெளியான FIR திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தனது புதிய தோற்றத்திலான படங்களை வெளியிட்டுள்ளார்.

You might also like