ஜெயம் ரவியின் இறைவன், சித்தார்த்தின் சித்தா, லாரன்ஸின் சந்திரமுகி-2 ஆகிய படங்கள் இன்று வெளியாகின.
‘வாமனன்’, ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் உருவாகி உள்ளது.
நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். க்ரைம் த்ரில்லர் களமாக அமைந்த இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ளன.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் படங்களை இயக்கிய S.U.அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘சித்தா’ திரைப்படம் இன்று வெளியாகியது.
பின்னணி இசையை விஷால் சந்திரசேகரும் படத்திற்கான பாடல்களை திபு நிணன் தாமஸும் உருவாக்கி உள்ளனர். சித்தப்பா-மகள் உறவைப் பற்றி பேசும் இப்படத்தை நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ளார்.
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் 65-வது படமாக ‘சந்திரமுகி 2’ உருவாகி உள்ளது.
இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ள இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வந்தது.
– தேஜேஷ்