வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் வசூலித்த ரூ.35,000 கோடி!?

இந்தியாவில் வங்கி கணக்குகளில் போதிய இருப்பு நிலையை பராமரிக்கவில்லை என்றால் வாடிக்கையாளர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்படும். இந்த அபராத தொகை வங்கிகளைப் பொறுத்து மாறுபட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து ஏடிஎம் பண பரிவர்த்தனை சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஏடிஎம் சேவையை பொறுத்தவரை 3 – 5 பரிவர்த்தனைகளுக்கு இலவசம் அதற்கு பிறகு செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும்.

இந்த நிலையில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைக்காத காரணத்தினால் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து 35,000 கோடியை வசூலித்ததாக மத்திய அரசு மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளது.

அதே போல ஏடிஎம் பண பரிவர்த்தனை கட்டணமாக 8,289 கோடியும் எஸ்.எம்.எஸ். சேவைகளுக்காக 6,254 கோடியும் வசூலாகி உள்ளது என எழுத்துபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like