ஏவிஎம்: தமிழ் சினிமாவின் ஆரம்ப கால அடையாளம்!

தமிழ் சினிமா உலகில் ஏவிஎம் தயாரிப்பு தனித்தன்மை பொருந்தியதாக இருந்தது. ஏவிஎம்மின் கடின உழைப்பு, புதுமை மோகம், மக்கள் ரசனைக் கேற்ப படங்களை தயாரிக்க உதவியது.

சென்னையில் தனது சொந்த ஸ்டுடியோவில் – ஏவிஎம்மில் தயாரித்த முதல் படம் ‘வாழ்க்கை’ (1949). இதுவே மெய்யப்பரின் வாழ்க்கையையும் அடையாளம் காட்டியது.

ஏவிஎம் ஸ்டுடியோ தமிழ் சினிமாவில் தன்னிகரற்று பேரும் புகழும் பெறக்கூடிய வாய்ப்பை அமைத்துக் கொடுத்தது.

படத்தயாரிப்பு நிறுவனம் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாகவும் ஏவிஎம் அமைந்தது. இந்தச் சிறப்புக்கெல்லாம் மெய்யப்பரின் அபாரத் திறமைகள்தான் காரணம்.

தொடர்ந்து ‘ஓர் இரவு’ (1950) ‘பராசக்தி’, ‘பெண்’, ‘அந்தநாள்’, ‘குலதெய்வம்’, ‘சர்வர் சுந்தரம்’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘அன்னை’, ‘நானும் ஒரு பெண்’, ‘உயர்ந்த மனிதன்’, ‘அன்போ வா’ உள்ளிட்ட படங்கள் ஏவிஎம் தயாரிப்பு என்பதற்கான தனியான மவுசை அடையாளத்தை தமிழில் உருவாக்கியது.

மெய்யப்பரின் தெளிவான நோக்கமும் திட்டமிடலும் ஏவிஎம் நிறுவனம் தொடர்ந்து இன்றுவரை இயங்குவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.

  • நன்றி: முகநூல் பதிவு
You might also like