சி. மகேந்திரனின் மலேசிய பயண அனுபவம்!
மலேசியாவின் தலைநகர், கோலாலம்பூர் வந்து சேர்நதேன். நகர் வானுயர்ந்த கட்டடங்களால் நிரம்பி வழிகிறது. வானத்தைத் தொட்டுவிட ஒன்றை ஒன்றை போட்டி போட்டி நிற்கின்றன. மலாய் மொழியும் சீன மொழியும் சுற்றிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
விதவிதமான மோட்டார் வாகங்னங்கள். மோட்டர் சைக்கிள் குறைவாகவே கண்ணில் படுகின்றன. 11வது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டுக்கு அறிஞர்கள் வந்து சேருகிறார்கள்.
பெண்களும் இளைஞர்களும் அறிஞர்களில் கூடுதல் எண்ணிக்கை. தமிழுக்காக தன்னையே தந்த தனிநாயகம் அடிகளால் முதல் மாநாடு கோலாம்பூரில்தான் நடைபெற்றது. அவர் கனவு வீண் போகவில்லை என்பதை உணரும் தருணம் இது.
இன்று பேருந்தில் நகரம் முழுவதும் அழைத்துச் செல்லப்பட்டோம்.
சுற்றுலாவைவிட, பல்வேறு அறிஞர்களிடம் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு புதிய உற்சாகத்தைத் தந்தது.
இவர்கள் உலகின் பல பாகங்களிலிருந்து வந்திருந்தார்கள்.
கோலாம்பூரில் போதி தர்மரின் ஆலயம். காஞ்சிபுரத்திலிருந்து சென்றவர் என்ற கருத்து இருக்கிறது.
அதனுடைய பிரம்மாண்டத்தில் மயங்கி விட்டேன். இது என்னை, எதை எதையோ சிந்திக்க வைத்துவிட்டது.
அதற்குள் அடங்கியிருக்கும் பிரபஞ்ச நம்பிக்கை என்னை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது.
இந்த புரட்சிகர நம்பிக்கைகள் சிறகடித்து பறக்க எனது கோலாம்பூர் பயணம் தொடர்கிறது.