“நமது நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத்துறைகளிலும் மேன்மை பெற்று விளங்கச் செய்ய வேண்டும்.
நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும், அறிவு வளர்ச்சிக்காகவும், கலை வளர்ச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும் இதன் மூலம் உழைத்து வருவோம்.
ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும்.
இதை அறவே விடுத்து தேசம், தேசம் எனக் கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கம் அன்று.
மக்களுள் தன் மதிப்பும், சமத்துவமும் ஓங்கி வளர வேண்டும். மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும்’’
– 2.5.1925 அன்று வெளியான ‘குடியரசு’ முதல் இதழில் பெரியார் எழுதிய தலையங்கத்தின் ஒரு பகுதி.