மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை
கடலூர் மாவட்டத்தில், என்.எல்.சி. நிறுவனம் 3-வது நிலக்கரி சுரங்கத்துக்கான நிலம் எடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தொடர்பாக, தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன், தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்,
நில நிர்வாக ஆணையர், வருவாய்த்துறை முதன்மை செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், என்.எல்.சி. நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர், இயக்குனர், தலைமைப் பொது மேலாளர் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன்,
“என்.எல்.சி. நிறுவனத்துக்கு வீடு, நிலம் தந்த விவசாயிகளுக்கு, வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலையும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1 கோடியும், மாற்று இடமாக 10 சென்ட் நிலமும் வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.