– தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பு வாதம் செய்தது.
இந்நிலையில், “ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பதில் என்ன தவறு” என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ” ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் மரணங்கள், குடும்பங்கள் வறுமையில் வாடுவதையும் தடுக்கவே தடை சட்டம்.
மக்கள் நலன் தான் மிக முக்கியம். மக்களை பாதுகாக்கவே சட்டம் இயற்றப்பட்டதாக அரசு கூறுகிறது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருதரப்பு வாதத்தின் முடிவில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகளுக்கு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதோடு, இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்த பிறகே இடைக்கால உத்தரவு குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.