தேர்வுத்துறை இயக்குநரகம் உத்தரவு
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு ஆங்கில பாடத் தோ்வு ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெற்றது. வினாத்தாளின் முதல் பகுதியின் ஒரு மதிப்பெண் வினாக்களான இணைச் சொல் மற்றும் எதிர்ச் சொல் அமைக்கப்பட்டிருக்கும்.
இதில் 1 முதல் 3 வரையிலான வினாக்கள் இணைச் சொல்லாகவும், 4 முதல் 6 வரையிலான வினாக்கள் எதிர்ச் சொல்லாகவும் கேட்பது வழக்கம்.
ஆனால், 1 முதல் 6 வரையிலான வினாக்களுக்கு இணைச் சொல் விடையளிக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டதால் மாணவா்கள் குழப்பம் அடைந்தனா்.
இதனால் 4, 5 மற்றும் 6 வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று அந்த வினாக்களுக்கு எந்த விடை அளித்தாலும் முழு மதிப்பெண் அளிக்க அரசு தோ்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இதுபோல் வினா எண் 28-க்கு பதில் எழுத முயற்சித்திருந்தால் முழு மதிப்பெண் வழங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.