மாற்றுத்திறனாளிகள் நலத்துறை புதிய அறிவிப்புகள்!

1. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்குத் தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கிக் கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் 1000 நபர்களுக்கு பயனளிக்கும் வகையில் ரூ.120 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

2.உயர் கல்வி பயிலும் ஆயிரம் பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தலா 14,000 மதிப்பில் நவீன வாசிக்கும் கருவி வழங்கும் வகையில் ரூ.140.00 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

3.ஒருகால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் விரிவு படுத்தப்பட்டு 500 பயனாளிகளுக்கு 450 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

4.உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்படும்

5.தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணம் மருத்துவம் கல்வி மற்றும் இதர உதவித்தொகையினை உயர்த்தி கூடுதலாக 200 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

6.செவி மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வாயிலாக சைகை மொழி பெயர்ப்பாளர் பயிற்சி அளிக்க 15 லட்சம் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும்

7.மாற்றுத்திறனாளிகளின் சேவையில் ஈடுபட்டுள்ள அரசு நிதி உதவி பெறும் ஆரம்பநிலை பயிற்சி மையங்கள் மற்றும் மறுவாழ்வு இல்லங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட வரும் மதிப்பூதியத்தினை உயர்த்தி வழங்குவதற்காக 534.78 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

8.அரசு நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 326 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளை பராமரிக்க ஏதுவாக மாதம்தோறும் 4500 மதிப்பூதியத்தில் பராமரிப்பு உதவியாளர்களை நியமனம் செய்ய 176.04 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

9.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் பத்து அரசு மறுவாழ்வு இல்லங்களில் தொழு நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்து தங்கி உள்ள 592 மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் உணவூட்டு மானியத்தினை 42 இல் இருந்து 100 ஆக உயர்த்தி ஆண்டுக்கு 124 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

10.மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை சமுதாயத்தில் ஒருங்கிணைக்கும் பொருட்டு மீண்டும் இல்லம் எனும் புதிய திட்டத்தினை முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களில் அறிமுகப்படுத்தி ஒரு மாவட்டத்திற்கு இரண்டு இல்லங்கள் விதம் 10 இல்லங்கள் 40 நபர்கள் பயன்பெறும் வகையில் 50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

11.மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுத்துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்புவதற்கு அந்தந்த துறைகள் மூலம் பணியிடங்களை நிர்ணயம் செய்து சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி வாய்ப்புகள் வழங்கப்படும்.

12.மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையினை இரு மடங்காக உயர்த்தி 22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 700.00 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்

13.மனநலம் சார் மற்றும் அறிவு சார்ந்த மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 150 பணியாளிகள் பயன்பெறும் வகையில் நான்கு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு மூன்று இல்லங்கள் கட்டுவதற்கு ரூபாய் 14 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

You might also like