ஜூனில் வெளியாகும் சமுத்திரகனியின் ‘விமானம்’!

திரைப்படங்களில் பல்வேறு வகையான கதாபாத்திரங்களை ஏற்று, அதில் தன் தனித்துவமான திறமையைக் காண்பித்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்திருப்பவர் நடிகர் சமுத்திரக்கனி.

தற்போது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் தயாராகி இருக்கும் ‘விமானம்’ எனும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும், கதையின் நாயகனாகவும், உணர்வுபூர்வமான மற்றும் ஊக்கமளிக்கும் வகையிலும் நடித்து, பார்வையாளர்களுக்கு விமான பயண அனுபவத்தை அளிக்கத் தயாராகிவிட்டார்.

இந்த ‘விமானம்’ திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, அதனுடன் பிரத்யேக காணொளி மூலம் தெரிவித்திருக்கிறது.

அந்த காணொளியில், ”நல்லதொரு இனிமையான அனுபவக் குறிப்புடன் தொடங்குகிறது. தந்தையும், அவரது ஏழு வயது மகனான ராஜூவும் பேசத் தொடங்குகிறார்கள். அவர்களுக்குள் ஆசை என்றால் என்ன? என்பதை பரிமாறிக் கொள்வதையும் காண்கிறோம். குழந்தை விமானத்தில் உயரமாக பறக்க விரும்புகிறது. இதனால் அவர் வானத்திற்கு மேலே இருந்து உலகை பார்க்கிறார்.

மோசமான பொருளாதார நிலை காரணமாக அவரால் நிறைவேற்ற முடியாத கனவாக இருந்தாலும், அவனது ஆசையை தந்தை பாராட்டுகிறார்” என பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

‘விமானம்’ தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே தருணத்தில் தயாரிக்கப்பட்ட இரு மொழி திரைப்படமாகும். இதனை சிவ பிரசாத் யானலா எழுதி இயக்கியிருக்கிறார். இதில் சமுத்திரக்கனியுடன் மாஸ்டர் துருவன்,அனுசுயா பரத்வாஜ், மீரா ஜாஸ்மின், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ராகுல், ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தென்னிந்திய திரைப்படங்களுக்கான தலைவர் அக்ஷய் கெஜ்ரிவால், ”வலுவான கதைக்களம்… திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் விமானத்தை வழங்குவது எங்கள் பாக்கியம். இப்படத்தின் மூலம் பார்வையாளர்கள் உணர்வுபூர்வமான பயணத்திற்கு தயாராவார்கள்” என்றார்.

You might also like