10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது!

தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, போலி மருத்துவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளை சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுடன் இணைந்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாட்களில் 72 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாகத் திருவாரூர் மாவட்டத்தில் 12 போலி மருத்துவர்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆவணியூர் புறவழிச்சாலையில் உள்ள தனியார் மருந்தகத்தில் மருத்துவர் எனக் கூறி போலியாக மருத்துவம் பார்த்த இளம் பெண்ணை ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

You might also like