சிறப்பாக நடந்த செல்லம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா!

பச்சையப்பன் அறக்கட்டளையின்கீழ் இயங்கும் சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா சிறப்பான முறையில் நடைபெற்றது.

பட்டமளிப்பு விழாவிற்கு மேனாள் பல்கலைக் கழகத் தேர்வு கட்டுப்பாட்டாளரும் செனட் உறுப்பினரும், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வருமான முனைவர் திருமகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

மாணவியருக்கு பட்டங்களை வழங்கி நிகழ்வைச் சிறப்பித்தார்.

கல்லூரி முதல்வர் முனைவர் மகாலட்சுமி நட்சத்திரம் பட்டமளிப்பு விழாவினைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தப் பட்டமளிப்பு விழாவில் 848 மாணவியர் பட்டம் பெற்றனர்.

You might also like