1962-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா, ராஜ்யசபைக்குத் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
சபையில் ஒருமுறை இந்தித் திணிப்பு பற்றி காரசாரமாக விவாதம் நடந்தது. வட இந்தியத் தலைவர்கள் கட்சி பேதமின்றி இந்தித் திணிப்புக்கு வக்காலத்து வாங்கிப் பேசினார்கள்.
அண்ணா தமிழின் இலக்கியங்களையும் அவற்றின் பெருமைகளையும் குறிப்பிட்டுப் பேசிவிட்டு,
“இந்தியில் இலக்கியம் என்று பார்த்தால் இரண்டுதான் எனக்குத் தோன்றுகிறது. ஒன்று துளசி இராமாயணம்… மற்றது…..” என்று சற்றே நிறுத்தினார்.
இரண்டாவதாக எதைக் குறிப்பிடுவார் என்று சபையோர் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது அண்ணா சொன்னார், ”ரயில்வே கைடு!”
இதைக் கேட்டு சபை சிரியோ சிரியென்று சிரித்தது. அண்ணாவின் பேச்சையும் அதிலுள்ள நகைச்சுவையையும் வெகுவாகப் பாராட்டிப் புகழ்ந்தனர், கட்சி பேதமின்றி!
- நன்றி : தினமணி