பூமிக்கு வந்த சோயுஸ் விண்கலம்!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை முடித்த விண்வெளி வீரர்கள் 3 பேர், பூமிக்கு திரும்புவதற்கான சோயுஸ் எம்எஸ்-22 விண்கலம் மீது கடந்த டிசம்பர் மாதம் சிறிய விண்கல் மோதியது.

இதனால் விண்கலம் லேசான சேதம் அடைந்ததுடன், குளிரூட்டியில் கசிவு ஏற்பட்டது.

இதையடுத்து விண்கலத்தில் தங்கியிருக்கும் 3 வீரர்களையும் ஏற்றி வருவதற்காக கடந்த மாதம் சோயுஸ் எம்எஸ்-23 என்ற விண்கலத்தை ரஷியா அனுப்பியது.

அதேசமயம், சேதமடைந்த சோயுஸ் எம்எஸ்-22 விண்கலத்தை ஆட்கள் இன்றி பூமிக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிக்கப்பட்ட சோயுஸ் விண்கலம் நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பியது.

பைகானூர் ஏவுதளம் அருகில் உள்ள கசாக் புல்வெளியில் விண்கலம் தரையிறங்கியது.

விண்கலத்தில் சிறிய அளவிலேயே சேதம் ஏற்பட்டுள்ளதால், அதை சரிசெய்து மீண்டும் பயன்படுத்தலாமா? என்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

You might also like