ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தும் பாஜக!

ராகுல்காந்தி எம்.பி விமர்சனம்

பிரிட்டனுக்கு ஒருவார கால பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது, ‘21-ஆம் நூற்றாண்டில் கவனிப்பதற்கு கற்றுக் கொள்வோம்’ என்ற தலைப்பில் பேசிய அவர், ”இஸ்ரேலை சோ்ந்த உளவு நிறுவன மென்பொருளை எனது கைப்பேசி உள்பட எதிர்க்கட்சிகளைச் சோ்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களின் கைப்பேசிகளில் நிறுவி மத்திய அரசு ஒட்டுக் கேட்டுள்ளது.

இதனால், இந்தியாவில் இப்போது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய நெருக்கடியும், அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றம், ஊடகங்கள், நீதித்துறை ஆகியவை சிறப்பாக செயல்பட ஜனநாயகம் மிகவும் முக்கியமானது.

ஆனால், இந்தியாவில் ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகள் மீதே தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, நாடு என்பது பல யூனியன்களை உள்ளடக்கியது. அனைத்து யூனியன்களையும் மத்திய அரசு கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

ஆனால், மத்தியில் உள்ள பாஜக அரசு, மாநில அரசுகளுடன் எவ்வித ஆலோசனையும் நடத்தப்படுவது இல்லை” என்று  குற்றம் சாட்டினார்.

You might also like