நூல் அறிமுகம்:
கும்பகோணம் அருகில் சுவாமிலையில் வசித்துவரும் வித்யாஷங்கர் ஸ்தபதி, பாரம்பரிய சிற்பிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது நூல் பற்றி கலை விமர்சகர் இந்திரன் எழுதிய பதிவு.
80 வயது முதிர்ந்த கும்பகோணம் சுவாமிமலையைச் சேர்ந்த நவீன சிற்பி வித்யாஷங்கர் ஸ்தபதி உலோக புடைப்பு சிற்பங்களின் முன்னோடி.
மரபார்ந்த சிற்பிகளின் குடும்பத்தில் நான்காவது தலைமுறையாக வந்தவர்.
வழிபடும் விக்கிரகங்களுக்கு வெள்ளிக் கவசங்கள் செய்யும் கௌரிஷங்கர் ஸ்தபதியின் மகனாகப் பிறந்த இவர் 1961இல் சென்னைக் கலை கைவினைப் பள்ளியில் பயின்றதினால் நவீன சிற்ப முயற்சிகளில் பல பரிசோதனைகளைச் செய்தார்.
மரபார்ந்த செவ்வியல் தமிழ் அழகியலை நவீன கலை வெளிப்பாட்டுக்கு நீட்சித்த மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தவர் இவர்.
“தற்காலத்தின் யதார்த்தத்தை கிளர்ச்சியூட்ட விரும்புகிறேன்” என்று எனது “தேடலின் குரல்கள்” (2000) நூலில் சுய வாக்குமூலமாகக் குறிப்பிடுகிறார்.
“எனக்கு முன்னோடியான வித்யாஷங்கர் ஸ்தபதியின் உத்வேகமின்றி நான் எங்கிருப்பேன்?” என்று இவருக்குப் பிந்தைய தலைமுறையில் சர்வதேசப் புகழ்பெற்ற சிற்பியான பி.எஸ். நந்தகோபால் குறிப்பிடுகிறார்.
****
சிற்பி வித்தியாஷங்கர் ஸ்தபதியும் நவீன சிற்பமும்:
மணிவாசகர் பதிப்பகம்.
விலை: ரூ. 600/-