சுயதொழில் சாஷன் பஜார்: 6 ஆயிரம் பார்வையாளர்கள்!

ஷங்கர்லால் சுந்தர்பாய் சாஷன் ஜெயின் மகளிர் கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையமான சபாஷ் சுயதொழில்முனைவோர் முன்னேற்றக் குழு நடத்தும் சாஷன் பஜார் 2023 நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.மதுமதி நிகழ்வைத் தொடங்கிவைத்தார்.

கல்லூரிச் செயலர் ஸ்ரீமதி உஷா அபய ஸ்ரீஸ்ரீமால், கல்லூரி முதல்வர் முனைவர் சா.பத்மாவதி ஆகியோர் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

சபாஷ் சுய தொழில்முனைவோர் முன்னேற்றக் குழு நடத்தும் நிகழ்ச்சியில் உணவு, ஆடைகள், இயற்கை உரங்கள் மற்றும் காய்கள், மூலிகைகள், பூச்செடிகள், அழகுசாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் விளையாட்டுகள் உள்ளிட்ட 140 கடைகள் இடம்பெற்றன.

அதில் 6000-க்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்ததோடு, முன்னாள் மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுவை உள்ளடக்கிய சுமார் 300 கடை உரிமையாளர்களும் பயனடைந்தனர்.

கல்லூரி மாணவிகள் தங்களின் தொழில்முனைவினை மேம்படுத்தும் திறனை வளர்க்கும் வகையிலும் தங்களது சொந்த தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் உத்தியை அறியும் வகையிலும் நிகழ்ச்சி அமைந்தது.

You might also like