உலகத் தாய்மொழி நாளையொட்டி ஆண்டுதோறும் தமிழில் உருவாகும் சிறந்த படைப்புகளைப் பாராட்டும் வகையில் சிறந்த நூல்களையும், பதிப்பகங்களையும் தேர்வு செய்து தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாக தன்னம்பிக்கைப் பேச்சாளர் ராம்குமார் சிங்காரத்தின் ‘நீங்கள் ஏன் இன்னும் கோடீஸ்வரர் ஆகவில்லை?’ என்ற நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சுயமுன்னேற்றம் குறித்தும், தன்னம்பிக்கை வளர்ப்பது குறித்தும் எழுதப்பட்டது இந்த நூல் என்பது சிறப்புக்குரிய ஒன்று.
இதையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நீதிபதி பஷீர் அஹமத் சயீத் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சிறந்த நூலுக்கான பரிசை நூலாசிரியர் ராம்குமார் சிங்காரம் பெற்றுக்கொண்டார்.
இந்த நூலை வெளியிட்டதற்காக சிறந்த பதிப்பகமாக ‘தாய் வெளியீடு’ தேர்வு செய்யப்பட்டது.
அப்படித் தேர்வு செய்யப்பட்ட சிறந்த பதிப்பகத்திற்கான விருதை தாய் வெளியீடு சார்பாக திருமதி கவிதா பெற்றுக்கொண்டார்.
விருதுகளை தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஔவை அருள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் இரா.சந்திரசேகரன், தமிழ் வளர்ச்சித்துறை அரசு செயலாளர் இரா.செல்வராசு, தன்னம்பிக்கைப் பேச்சாளர் பேராசிரியர் பர்வீன் சுல்தானா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.