ஏடிஎம் கொள்ளையில் கைதானவர்களிடம் நீளும் விசாரணை!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், போளூா் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ம் தேதி அதிகாலை புகுந்த கொள்ளைக் கும்பல், ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சத்தை திருடிச் சென்றது.

இதில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இந்த தனிப்படையினா் ஆந்திரா, கா்நாடகா, ஹரியாணா மாநிலங்களில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், இந்தக் கொள்ளையில் தொடர்புடைய 2 பேரை இருவரை தனிப்படை காவல் துறையினர் ஹரியாணாவில் கைது செய்துள்ளனர்.

ஆரிப், ஆசாத் இருவரில், ஒருவன் கொள்ளைக் குழுவுக்கு தலைவன் என்று கூறப்படுகிறது. 

இதற்கிடையே அரியானாவில் பிடிபட்ட முகமது ஆரிப், ஆசாத் இருவரையும் தனிப்படை காவல் துறையினர் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் கொள்ளையர்கள் இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இன்று காலை திரும்பவும் நீதிபதி முன்பு ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேரை ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேரை 13 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

You might also like