குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக தமிழ்நாடு வந்துள்ளார் திரவுபதி முர்மு. இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள அவர் மதுரை, கோவைக்கு செல்கிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கோவை செல்கிறார்.
கோவை ஈஷா மையத்தில் இன்று நடக்கும் சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
இன்று மாலை 6 மணிக்கு சிவராத்திரி விழாவில் பங்கேற்கும் முர்மு இரவு 9.15-க்கு புறப்பட்டு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
விமான நிலையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதி, காரில் அவர் செல்லும் வழித்தட பகுதிகள் என, சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து கோவை ஈஷா மையத்திற்கு செல்லும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, அங்கு நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
குடியரசுத் தலைவராக பதவியேற்றப் பிறகு முதல்முறையாக தமிழ்நாடு வருவதையொட்டி மதுரை, கோவையில் சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.