நிலநடுக்கத்தை அறிவிக்கிறதா காகங்கள்?

ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது.

அங்குள்ள கட்டிடங்கள், சாலைகள் மற்றும் வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் குவிந்திருந்தன. அதோடு வானத்திலும் காகங்கள் கூட்டம் கூட்டமாக பறந்தன.

இதை பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே தீவு முழுவதும் காகங்கள் சூழ்ந்திருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இதனிடையே இந்த நிகழ்வு, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளை சுட்டிக்காட்டுவதாக நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர்.

துருக்கியில் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பறவைகள் ஒலி எழுப்பியபடி கூட்டம் கூட்டமாக வானத்தில் பறந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

You might also like