– நிர்மலா சீதாராமன்
டெல்லியில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய ஆலோசனைக் கூட்டத்தை ஒன்றிய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் நடத்தினார்.
பல்வேறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பொருளாதார மேம்பாடு குறித்து நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
அப்போது அவர், ”2023-24 பட்ஜெட்டில் அரசின் பொதுச் செலவினம் 33 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, ரூ.10 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. கடந்த 3 பட்ஜெட்களில் அரசின் பொதுச் செலவினத்துக்கான ஒதுக்கீடு தொடா்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீா்திருத்தங்களைக் கொண்டுவர ஒன்றிய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான வழிமுறைகள் ஏற்கெனவே உள்ளன.
மாநில அரசுகளிடையே இது தொடா்பாக ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படும்” என்றுத் தெரிவித்தார்.