– இயக்குநர் தங்கர்பச்சான் பெருமிதம்
தங்கர்பச்சான் இயக்கிவரும் படம் கருமேகங்கள் கலைகின்றன. இந்தப் படத்தில் தமிழின் முன்னணி இயக்குநர்களான பாரதிராஜா, கெளதம் வாசுதேவ் மேனன் போன்றோர் நடித்துள்ளார்கள். படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.
இதுபற்றி சமூக வலைத்தளத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள இயக்குநர் தங்கர்பச்சான், “கருமேகங்கள் கலைகின்றன திரைப்படம் வெளியீட்டிற்கு ஆயத்தமாகி வரும் நிலையில், பாரதிராஜா அவர்களின் குரல் பதிவு நிறைவுற்றது.
‘ராமநாதன்’ என்னும் முதன்மை பாத்திரத்திற்காக அவர் தந்த ஒத்துழைப்பை எந்நாளும் மறவேன். இம்மேதையுடன் பணிபுரிந்த நாட்கள் என் வாழ்வின் மிகச்சிறந்த நாட்கள்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.