ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருதைப் பெற்ற வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன்!

ஜனவரி 27-ம் தேதி மதுரையில் உள்ள சோக்கோ அறக்கட்டளை வழங்கும் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் பெயரிலான சமூகநீதி மற்றும் மனித உரிமைப் போராளி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த விருது மனித உரிமைக் களத்தில் தொடர்ந்து இயங்கி வரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் காவல்துறை உதவி காவல் ஆணையருமான பி.பாலசுப்பிரமணியத்திற்கும்,

மலைவாழ் மக்களுக்காக வாழ்நாள் முழுக்கப் போராடியவரான அருட்தந்தை ஸ்டேன் சுவாமிக்கும்,

பேராசிரியர் ஆர்.விஜயகுமாருக்கும், மனித உரிமைப் போராளியும், மூத்த ஊடகவியலாளருமான டி.எஸ்.எஸ்.மணிக்கும், பெண்ணுரிமைப் போராளியான ஷீலு ஃபிரான்சிஸ்ஸூக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன.

நக்கீரன் இதழ் ஆசிரியரான ஆர்.ஆர்.கோபால் இந்தச் சிறப்புமிக்க விருதுகளை வழங்கினார்.

சோக்கோ அளக்கட்டளையின் தலைவரான அ.மகபூப் பாட்சா தலைமையில் விழா நடைபெற்றது.

இதில் வழக்கறிஞர்களும் திரளாகச் சட்டம் பயிலும் மாணவர்களும், மனித உரிமைக்காகக் குரல் எழுப்பும் தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கிருஷ்ணய்யர் விருதைப் பெற்றவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பி.பாலசுப்பிரமணியன் ‘தாய்’ இணைய வாசகர்களுக்குப் பரிச்சயமானவர்.

‘தமிழ் பாலன்’ என்ற பெயரில் பல முக்கியமான கட்டுரைகளை எழுதியவர்.

பி.பாலசுப்ரமணியன் தந்தை பெரியாரின் வழிகளைப் பின்பற்றியவர். மனித நேயத்துடன் ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தீவிிரம் காட்டியவர்.

அடித்தட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரும்பாடுபட்டவர்.

ரயில்வே ஊழியராக பணியாற்றிய தனது தந்தையின் திடீர் மறைவுக்குப் பிறகு, அவர் ஸ்டேஷன் மாஸ்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவரது விருப்பமாக இருந்தது.
அதன்பிறகு தென் மத்திய ரயில்வே. சிபிஎம் கட்சியால், அவர் காவல்துறையில் சேர அறிவுறுத்தப்பட்டார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த மாண்புமிகு திரு.எம்.அருணாச்சலம் இவரின் திறமைகளை கண்டறிந்து, அவரை தனது கூடுதல் தனிச் செயலாளராக நியமித்து, அதற்கான உதவிகளை வழங்கினார்.

நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், தொழில்துறை அமைச்சகம் மற்றும் தொழிலாளர் அமைச்சகம் ஆகியவற்றில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

சட்டம்-ஒழுங்கு, உளவுத்துறை, விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு போன்ற காவல் துறையின் முக்கியமான துறைகளில் பணியாற்றியுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் மிக உயர்ந்த ஒழுங்கு உட்பட பல்வேறு நிர்வாகத்தின் பல்வேறு அடுக்குகள், பல்வேறு துறைகளின் பல்வேறு பணிகளைக் கையாண்டவர்.

தமிழ்நாட்டின் புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டபோது அவரது வாழ்க்கைப் பாதை ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியதாக கூறும் இவர், இரண்டு ஆண்டுகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஜூடிசியல் விஜிலென்ஸ் பிரிவின் மற்றொரு முக்கியமான துறையிலும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like