ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் நேற்று புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2,119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் மீண்டும் கொரோனோ தொற்று பரவும் அபாயம் இருப்பதால் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் திரையரங்குகள், கடைகளில் சானிடைசைர்களை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த 30 நாட்களுக்கு மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.