– அன்டோனியோ குட்டரெஸ் நம்பிக்கை
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போரை தொடங்கியது. உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை, வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10-வது மாதத்தைக் கடந்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த ரஷியாவுக்கு ஐ.நா. சபை, உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன.
ஆனால் அதனை நிராகரித்து ரஷியா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே, ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் போரை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
இரு நாட்டு அதிபர்களைச் சந்தித்து பேசினார். உக்ரைன் ரஷியா போரை நிறுத்தும்படி வலியுறுத்தினார்.
இந்நிலையில், உக்ரைன் ரஷியா இடையிலான போர் 2023-ல் முடிவுக்கு வரும் என ஐக்கிய நாடுகளின் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடந்த மாநாட்டில் பேசிய குட்டரெஸ், “உக்ரைனில் எதிர்காலத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை தான் காணவில்லை. ஏற்கனவே அதிகரித்து வரும் ராணுவ மோதல்கள் தொடரும்.
ஆனால் 2023-ம் ஆண்டின் இறுதிக்குள் உக்ரைன் ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்தையும் செய்யவேண்டும். இது நடக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என தெரிவித்தார்.