பாடகர் சித்ஶ்ரீராம் கட்டில் என்ற திரைப்படத்திற்காக ஶ்ரீகாந்த் தேவா இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். தமிழில் மட்டுமல்லாமல், மலையாளத்தில் கட்டில், தெலுங்கில் – பந்திரி மஞ்ஞம், கன்னடத்தில் – மஞ்சா என நான்கு மொழிகளிலும் அந்தப் பாடலைப் பாடியுள்ளார்.
இது பற்றிய அனுபவத்தை வீடியோவாக அவர் பகிர்ந்துள்ளார்.
அதில், “மிகவும் உணர்வுமிக்க பாடல்களாக நான்கு மொழிகளிலும் அமைந்துள்ளது.
நான் மிகவும் நேசித்து மிகுந்த ஈடுபாடு கொண்டு இதில் பாடியுள்ளேன். படமும் பாடலும் நான்கு மொழிகளில் வெற்றிபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
எம்.ஆர்.டி மியூசிக்ஸ் ஆடியோ ரைட்ஸ் பெற்றுள்ளது.
இ.வி.கணேஷ்பாபு தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சிருஷ்டி டாங்கே கதாநாயகனாக நடித்துள்ளார்.