பாடங்களை உருவாக்கும் அளவுக்கு மாணவர்கள் உயர வேண்டும்!

-முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை ராணி மேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “பட்டங்களைப் பெறுபவர்கள், பாடங்களைக் கற்பதிலிருந்து பாடங்களை உருவாக்கும் அளவுக்கு மாணவர்கள் உயர வேண்டும்.

கம்பீரமான பாரம்பரியமான பெருமையைக் கொண்டது ராணி மேரி கல்லூரி. இந்தியாவில் முதன் முதலாகத் தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் ஒன்றும், தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரி என்ற பெருமையையும் கொண்டது ராணி மேரி கல்லூரி.

பட்டம் பெறும் நாள் என்பது ஒவ்வொருவரின் வாழ்நாளிலும் மறக்க முடியாத நாளாக இருக்கும்.

மாணவர்கள் பெற்ற அறிவு அவர்களை மேலும் மேலும் உயர்த்தட்டும் என்று முதல்வர் கூறினார்.

மேலும், பெண்கள் பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது அடிப்படை உரிமை என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

You might also like